கர்ப்பிணி பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி-சிலபாத்தில் சம்பவம்..!!

92

சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ பகுதியில் வீட்டில் சுய தனிமைப்படுத்தலில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணொருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

சிலாம் பொது வைத்தியசாலையில் குறித்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கபிலா மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, குறித்த பெண் தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பெண் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு பின்னர் அவரது வீட்டில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.