தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தாய்க்கு பின் தாரம்’ பாடலின் டீசர்..!!

90

‘பிக்பாஸ்’ புகழ் தர்ஷனின் ‘தாய்க்குப் பின் தாரம்’ பாடலின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றிய இலங்கையைச் சேர்ந்த தர்ஷன் பிக்பாஸ் டைட்டிலை அடையாத போதிலும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களின் மனதை வென்றிருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்து ஒரு வருடமாகிய நிலையில் இதுவரை தர்ஷன் நடிப்பில் ஒரு படம் கூட இன்னும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் தர்ஷன் நடிப்பில் வெளியாகவுள்ள ‘தாய்க்கு பின் தாரம்’ என்ற பாடலின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்தப் பாடலில் தர்ஷனுடன் தொலைக்காட்சி நடிகை ஆயிஷா நடித்துள்ளார். இந்தப் பாடல் சித் ஸ்ரீராம் தரண் குமார் இசையில் உருவாகியுள்ளது.

இந்த பாடலில் நடித்ததால் தனது கனவு நனவாகியுள்ளதாக தர்ஷன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.