பிரான்ஸில் அதிவேகமாக பரவும் கொரோனா வைரஸ்…!!!

62

பிரான்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்று மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
அங்கு ஏப்ரல் மாத நடுப்பகுதிக்கு பிறகு நாளொன்றுக்கான அதிகப்பட்ச கொவிட்-19 பாதிப்பு பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் பிரான்ஸில் ஐந்தாயிரத்து 429பேர் பாதிக்கப்பட்டனர். ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி 5,497பேர் பாதிக்கப்பட்டதற்கு பிறகு கடந்த 24 மணித்தியாலத்தில் தான், அதிகப்பட்ச கொரோனா வைரஸ் பாதிப்பு பதிவானது.

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று அதிபாதிப்பை ஏற்படுத்திக்கொண்டு 19ஆவது நாடாக விளங்கும் பிரான்ஸில் இரண்டு இலட்சத்து 53ஆயிரத்து 587பேர் பாதிக்கப்பட்டனர்.
30ஆயிரத்து 544பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒரு இலட்சத்து 37ஆயிரத்து 519பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 410பேரின் நிலை கவலைக்கிடமாக காணப்படுகின்றனர்.
இதுவரை 85ஆயிரத்து 524பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.