இராணுவ தளவாட உற்பத்தி பற்றி மோடியின் கருத்து…!!!

60

சுயச்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் இராணவ தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதே அரசின் இலக்கு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை தொடர்பான இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
நாடு சுதந்திரம் அடைந்தது முதலே உள்நாட்டில் பாதுகாப்புத் தளவாடங்களின் உற்பத்திக்கு உகந்த சூழல் இருந்தபோதும் அதை அதிகரிப்பதில் போதிய கவனம் செலுத்தப்படாமல் இருந்தது.

எனது அரசு நிர்வாகத்தில் அந்த நிலை மாற்றமடைந்து காணப்படுகின்றது. பாதுகாப்புத் துறையில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க இலக்கு நிா்ணயித்து அதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வருவதற்கும் தற்போதைய அரசு ஊக்கமளித்து வருகிறது என இவர் தெரிவித்துள்ளார்.