கர்ப்பிணிகளுக்கு நாளொன்றுக்கு தேவையான கலோரிகள்..!!

52

கர்ப்பிணி தாய்மார்கள் உணவு பழக்கத்தில் மேலதிக கவனத்தை செலுத்தவேண்டும். கலோரிகள் அதிகம் கொண்ட உணவை சாப்பிடவேண்டிய தேவையோடு, வயிற்றை நிரப்பி எடையை அதிகரிக்காத உணவாக அவை இருக்கவேண்டிய தேவையும் உள்ளது.

குறிப்பாக புரோட்டின் வகை உணவுகள் கர்ப்பிணி தாய்மார்களுக்கு மிக உகந்தது. இலகுவாக செமிபாடு ஆகுவதுடன், உடலுக்கு தேவையான கலோரிகளையும் கொண்டுவருகின்றது.

கர்ப்பிணி தாய்மார்கள் ‘பால்’ வகை உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பழங்கள் சாப்பிட முடிவில்லை என்றால், நீங்கள் தனியே ஒரு க்ளாஸ் பால் அருந்தி வந்தாலே போதுமானது.

கர்ப்பிணி தாய்மார்கள் நாள் ஒன்றுக்கு 350 இல் இருந்து 400 வரையான கலோரிகள் கொண்ட உணவை மேலதிகமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என மருத்துவ உலகம் தெரிவிக்கின்றது. ஆனால் அவை வயிற்றை மாத்திரமே நிரப்பும் உணவாக மாத்திரம் இருக்கக்கூடாது என்பதும் முக்கியமான ஒன்று..