நிலப்பரப்புகளை சட்டவிரோதமான முறையில் கையகப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை!

63

இலங்கை நில மீட்பு மற்றும் மேம்பாட்டுக் கழகம் சட்டவிரோதமான முறையில் நிலப்பரப்புகளை கையகப்படுத்துபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென எச்சரிக்கை விடுத்துள்ளது.

இவ்விடயம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எம்.எஸ்.ஆர்.டபிள்யூ டி.சொய்சா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத நிலப்பரப்புகள், இலங்கைக்கு ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத்தில் பொலிஸாருடன் இணைந்து சட்டவிரோத நிலப்பரப்புகள் மற்றும் கட்டுமானங்கள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.