ஐ.தே.க. வை ஐக்கிய மக்கள் சக்திக்கு விற்கும் சதித்திட்டத்தில் முன்னாள் சபாநாயகர் – வஜிர அபேவர்தன.

64

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியை ஐக்கிய மக்கள் சக்திக்கு விற்கும் சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுமாறு அண்மையில் அழைப்பு விடுத்திருந்தார்.

குறித்த அழைப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே வஜிர அபேவர்தன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை சட்டப்பூர்வமாகக் கைப்பற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சத்திக்கு முடியாது என்பதால் சதித்திட்டங்கள் ஊடாக அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கின்றது.

எனவே, ஐக்கிய தேசியக் கட்சியை அழிக்கச் சதிகாரர்களுக்கு ஒருபோதும் இடம்கொடுக்கமாட்டோம்” என அவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.