கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

57

இலங்கையில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 989ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றிலிருந்து இரண்டாயிரத்து 842 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில் மேலும் 135 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றினால் 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.