ட்ரம்ப்பின் ஆட்சி நான்கு ஆண்டுகளுக்கு தேவை: மைக் பென்ஸ் தெரிவிப்பு…!!!

54

அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கும் இக்கட்டான காலகட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஆட்சி இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு தேவை என்று துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

குடியரசுக் கட்சி சார்பாக அமெரிக்காவின் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் மைக் பென்ஸ் மீண்டும் போட்டியிட்டவுள்ள நிலையில் இவர்கள் இருவரும் தீவிரவாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கும் இந்தக் இக்கட்டான காலக்கட்டத்தில் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ட்ரம்பின் ஆட்சி தேவை என்றும் ஜோ பைடனின் கையில் அமெரிக்கா பாதுகாப்பாக இருக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற ட்ரம்ப் சிறந்த நோக்கங்களை கொண்டிருந்தார் என்றும் இதன் காரணமாகவே ட்ரம்புக்கு தான் ஆதரவாக பேசியதாகவும் மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜனநாயக் கட்சித் தலைவர் ஜோ பைடன் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்கா சீனாவுக்கு சொந்தமாகிவிடும் என்றும் அமெரிக்க வேலைவாய்ப்புகள் சீனாவுக்கு வழங்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரசாரம் ஒன்றில் கருத்து தெரிவித்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

அமெரிக்கா ஜனாதிபதித் தேர்தல் இவ்வருட இறுதியில் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் இதில் ஜனநாயகக் கட்சி சார்ப்பில் ஜோ பைடன் ஜனாதிபதி வேட்பாளராகவும் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி வேட்பாளராகவும் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.