திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இலவச தரிசன அட்டைகள் விநியோகம்…!!!

69

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் இலவச தரிசனத்திற்கான அட்டைகள் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகரித்து வந்த நிலையில் இலவச அட்டைகள் வழங்குவது கடந்த மாதம் இரத்து செய்யப்பட்டிருந்தது.

அத்துடன் தற்போது 300 ரூபாய் சிறப்பு தரிசனத்தில் தினசரி 9ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பக்தர்களின் வேண்டுகோளை கருத்தில் கொண்டு இன்று முதல் திருப்பதியில் 3ஆயிரம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்கான அட்டைகள் வழங்கப்படும் என்று தேவஸ்தானம் மேலும் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பக்தர்கள் ஆதார் கார்டை காண்பித்து அட்டைகளை திருப்பதியில் உள்ள ஸ்ரீனிவாசம் மற்றும் விஷ்ணு நிவாசம் ஆகிய இடங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.