மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் குணமடைந்தவர்கள்:04 இலட்சம்…!!!

56

மெக்ஸிகோவில் கொரோனா வைரஸ் பெருந் தொற்றினால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 04 இலட்சத்தைக் கடந்துள்ளது.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி மெக்ஸிகோவில் நான்கு இலட்சத்து 479பேர் குணமடைந்து காணப்படுகின்றனர்.

கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட எட்டாவது நாடாக விளங்கும் மெக்ஸிகோவில் இதுவரை மொத்தமாக ஐந்து இலட்சத்து 79ஆயிரத்து 914பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 62ஆயிரத்து 594பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், ஆறாயிரத்து 26பேர் பாதிக்கப்பட்டனர். 518பேர் உயிரிழந்தனர்.

ஒரு இலட்சத்து 16ஆயிரத்து 841பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மூவாயிரத்து 294பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.