இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு இன்று பிறந்த நாள்..!!

56

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இன்று ( திங்கட்கிழமை) தனது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், யுவனின் பிறந்த தினத்தை முன்னிட்டு இசையமைப்பாளர்கள் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்திகளை பகிர்ந்துகொள்கிறோம்.

அனிருத்
அன்பு யுவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அற்புதமான ஆண்டாக அமைய வாழ்த்துகள். அதிக அன்புடன் அனிருத்.

இமான்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன். டன் கணக்கில் மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும் ஆசீர்வாதமான வருடமாக அமையட்டும்.

சந்தோஷ் நாராயணன்
நெருக்கமான யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அனைத்து இசைக்கும் அன்புக்கும் நன்றி. நம்முடைய கிரிக்கெட் மேட்ச் இன்னும் பென்டிங்கில் உள்ளது.

சாம் சிஎஸ்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் யுவன். உங்கள் கனவும் வாழ்த்துகளுடம் நிஜமாகட்டும். அற்புதமான ஆண்டாக அமையட்டும்.

தரண்குமார்
எங்கள் மேஸ்ட்ரோ யுவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். எண்ணற்ற அன்பு, மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு நிறையட்டும். எனக்காக பல வருடங்களாகவே பாடி வருகிறீர்கள். அவைதான் எனது பயணத்தில் பெரிய பாடல்களாக அமைந்துள்ளன. உண்மையிலேயே நீங்கள் மிகவும் அன்பானவர். இந்த அன்பு என்றும் நிலைத்திருக்க வேண்டும்.

பிரேம்ஜி
எனது இசை குரு, எனது தம்பி, எனது தலைவன் யுவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். திரையுலகத்தைச் சேர்ந்த பல பிரபலங்களும் யுவனுக்கு வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.