இலங்கையில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு!

60

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை மூவாயிரத்து 12 ஆக அதிகரித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டிற்குத் திரும்பியிருந்த 12 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த வைரஸ் தொற்றிலிருந்து இதுவரை இரண்டாயிரத்து 860பேர் பூரண குணமடைந்துள்ள நிலையில் மேலும் 140 பேர் தொடர்ந்து வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இலங்கையில், இந்த வைரஸ் தொற்றினால் இதுவரை 12 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.