கூகுளுக்கு போட்டியாக ஆப்பிள் நிறுவனம்..!!

32

ஆப்பிள் நிறுவனம் சொந்தமாக தேடுபொறி சேவையை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தேடுபொறி பொறியாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானதும் இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்பதை உணர்த்துகிறது.

ஐஒஎஸ், ஐபேட்ஒஎஸ் மற்றும் மேக்ஒஎஸ் தளங்களில் கூகுள் டீபால்ட் சர்ச் என்ஜின் சேவையாக தொடர கூகுள் நிறுவனம் பல கோடி டாலர்களை ஆப்பிள் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தி வருகிறது. எனினும், இரு நிறுவனங்களுக்கிடையிலான ஒப்பந்த விவகாரத்தை பிரிட்டன் கூர்ந்து கவனித்து வருவதாக தகவல் வெளியானது.

இதன் காரணமாக ஆப்பிள் நிறுவனம் சொந்த தேடுப்பொறி சேவையை உருவாக்க திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் இந்த சேவை சார்ந்த திட்டத்தில் பணியாற்ற பொறியாளர்களை பணியமர்த்த இருக்கிறது.

இந்த பட்டியலில் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லெர்னிங் மற்றும் நேச்சுரல் லேங்குவேஜ் பிராசஸிங் போன்ற துறையில் பணியாற்றுவோரையும் ஆப்பிள் பணியமர்த்த இருக்கிறது.

தேடுபொறி சேவை வழங்குவதில் ஆப்பிள் நிறுவனத்திற்கு பெரும் இடையூறுகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு இருப்பதால் விரைவில் இதற்கு தீர்வு காண ஆப்பிள் முயற்சிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்பதும் முக்கியமானது.