சாம்சங் கேலக்ஸி ஏ12 விரைவில் அறிமுகம்..!!

35

சாம்சங் நிறுவனம் விரைவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ சீரிஸ் பிரிவில் அறிமுகமாக இருப்பதாகவும் இது கேலக்ஸி ஏ12 பெயரில் அழைக்கப்பட இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன் கேலக்ஸி ஏ11மொடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது. இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ125எஃப் எனும் மொடல் நம்பர் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போன் எஸ்எம்-ஏ115எஃப் எனும் மொடல் நம்பர் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என இருவித மெமரி ஆப்ஷன்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. இத்துடன் எல்சிடி ஸ்கிரீன், மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள் மற்றும் கைரேகை சென்சார் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

முந்தைய கேலக்ஸி ஏ11 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு கேமரா மற்றும் 2 எம்பி டெப்த் கேமரா வழங்கப்பட்டு இருந்தது. இத்துடன் பன்ச் ஹோல் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய கேலக்ஸி ஏ12 இதே வடிவமைப்பு கொண்டிருக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.