சீரற்ற காலநிலை காரணமாக குஜராத்தில் 14 பேர் உயிரிழப்பு…!!!

52

சீரற்ற காலநிலை காரணமாக குஜராத் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆகஉயர்வடைந்து காணப்படுகின்றது.

பருவமழை காரணமாக வடமாநிலங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. அந்தவகையில் குஜராத் மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது.

இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. குறித்த வெள்ளப்பெருக்கில் சிக்கி உயரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ள நிலையில், 9 பேரை தேசிய மீட்பு படையினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா வெள்ளப்பெருக்கில் சிக்கிய 39 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த வெள்ளப்பெருக்கினால் 140 இற்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.