பக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே ரொக்கெற் தாக்குதல்..!!

46

ஈராக் தலைநகர் பக்தாத் விமான நிலையம் அருகே ரொக்கெற் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டுத் தூதரகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள முக்கிய இடமாக பக்தாத் சர்வதேச விமான நிலையம் அருகே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு ரொக்கெட் குண்டுகள் விழுந்து வெடித்துள்ளன.

இந்நிலையில், வெற்றிடமான இடத்தில் ரொக்கெற்றுகள் வீழ்ந்து வெடித்ததால் எந்தவொரு உயிரிழப்பும் பதிவாகவில்லை எனவும் இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாரத்தில் தலைநகரை அண்மித்த பகுதிகளில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவம் இதுவென குறிப்பிடப்படுகிறது.