விசாரணையின் இடையில் கணவன் மனைவி மீது தாறுமாறாக தாக்குதல்!

51

29.08.2020 சனிக்கிழமை அல்வாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்தகராறு காரணமாக மனைவி கணவனுக்கு எதிராக நெல்லியடி போலீசில் முறைப்பாட்டை பதிவு செய்திருந்தார்.

போலீசார் இருவரையும் போலீஸ் நிலையம் வருமாறு அழைத்து இருந்தார்கள். இருவரும் விசாரணைக்காக நேற்றையதினம் போலீஸ் நிலையத்தில் சமூகமளித்திருந்தார்.

போலீசார் இருவரையும் விசாரணை செய்து கொண்டிருந்த போது திடீரென கணவன் மனைவி மீது தாறுமாறாக அடித்து உள்ளார்.

உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு கணவன் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பருத்தித்துறை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணையின் பின் ஒன்பதாம் மாதம் எட்டாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.