வேதாந்தா நிறுவனத்தின் புதிய மனு குறித்த விசாரணை இன்று…!!!

34

தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் புதிய மனுவினை தாக்கல் செய்துள்ளது.

குறித்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

தூத்துக்குடி ஸ்டொ்லைட் ஆலையை எதிரான போராட்டத்தைத் தொடா்ந்து நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த ஆலையை மூடுவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருந்தது.

தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து ஆலையை நடத்தும் வேதாந்த நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. இது தொடா்பான மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்றம் கடந்த 18 ஆம் திகதி தமிழக அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பளித்ததுள்ளது.