6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது!

63

ஆவா என அழைக்கப்படும் வினோதன் உள்பட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் நேற்றய தினம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 6 பேரும் பிறந்தாள் கொண்டாட்டம் ஒன்றுக்காக 12 பியர் ரின்களுடன் சென்று கொண்டிருந்த போது மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மானிப்பாய் பொன்னாலை வீதி, துர்க்கா மில் பகுதியில் ஆவா வாள்வெட்டுக் குழுவின் வீனோதன் உள்பட 6 பேர் கூடியுள்ளனர் என்று இரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பி்ரகாரம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் ஆவா வினோதன் உள்ளிட்ட 6 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.

எனினும் சந்தேக நபர்களின் சந்தேகமான நடமாட்டத்தால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களில் வழக்கு நிலுவைகள் உள்ளனவா? என விசாரணைகள் நிறைவடைந்ததும் அவர்களை பிணையில் விடுவிப்பது தொடர்பில் ஆராயப்படும் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. .