இந்தோ – பசுபிக் பிராந்தியம் குறித்து பேச்சுவார்த்தை..!!

47

இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாக இந்தியா பிரான்ஸ் மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.

குறித்த பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதற்கான முயற்சியில் சீனா ஈடுபட்டு வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை முக்கியதுவம் மிக்கதாக பார்க்கப்படுகிறது.

இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார மற்றும் புவியியல் சவால்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிராந்திய மற்றும் உலகளாவிய பலதரப்பு நிறுவனங்களின் முன்னுரிமைகள், சவால்கள் மற்றும் போக்குகள் பற்றிய தங்களின் கருத்துகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

உலகளாவிய கடல்சார் பொதுநலன்களின் முத்தரப்பு ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய மட்டத்தில் நடைமுறை கூட்டாண்மைக்கான சாத்தியக்கூறுகள் பற்றியும் இதன்போது விவாதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளமை என்பதும் குறிப்பிடத்தக்கது.