இலங்கையில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

80

இலங்கையில் மேலும் 22 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 ஆயிரத்து 71 ஆக அதிகரித்துள்ளது.

கட்டாரில் இருந்து நாடு திரும்பிய 22 பேருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 2 ஆயிரத்து 868 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

அதேநேரம் இந்த தொற்றுக்கு உள்ளான 191 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மேலும் இலங்கையில் இதுவரையில் 12 பேர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.