கோட்டை-மருதானை இடையேயான புகையிரத சேவையில் திடீர் பாதிப்பு…!!!

306

கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான புகையிரத சேவையில் மிகவும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இன்று காலை 8.15 களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி புறப்பட்டுச் சென்ற புகையிரதம் ஒன்று குறித்த பகுதியில் தடம்புரள்வுக்கு உள்ளாகியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் பாதிப்பேற்பட்ட புகையிரத பாதையை சீர்செய்யும் பணிகளில் புகையிரத நிலைய ஊழியர்களும், அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.