ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று 444 சிறைக் கைதிகளுக்கு விடுதலை…!!!

86

ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் சிறு தவறுகள் குறித்து கைது செய்யப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் இன்று (செவ்வாய்கிகழமை) விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தகவல் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய 29 சிறைச்சாலைகளை சேர்ந்த 18 பெண்கள் உட்பட 44 கைதிகளே இன்று விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அவர்களுள் 83 பேர் வெலிகட சிறைச்சாலையைச் சேர்ந்தவர்கள் என தகவல் தெரிவிக்கப்படுகின்றது.

தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்களே இவ்வாறு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகின்றது.