பிரணாப் முகர்ஜியின் இறுதிக் கிரியைகள் நிகழ்வு இன்று…!!!

88

மறைந்த குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் இறுதிக் கிரியைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறவுள்ளன .

மூளை அறுவை சிகிச்சைக் காரணமாக இராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரணாப் முகர்ஜி சிகிச்சை பயனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

அவரது மறைவை முன்னிட்டு 7 நாட்கள் துக்கதினத்தை அனுஷ்டிக்க மத்திய அரசு தகவல் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரணாப் முகர்ஜியின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகின்றன. இது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பிரணாப் முகர்ஜியின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் காலை 9.15 முதல் 10.15 வரை முக்கியப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படுவார்கள்.

பின்னர் ராஜாஜி மார்க்கில் அவரது உடல், பொதுமக்கள் மரியாதை செலுத்த ஒரு மணி நேரம் வைக்கப்படும், என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்று காரணமாக அவரது உடல், இராணுவ வாகனத்திற்கு பதிலாக வேனில் எடுத்துச் செல்லப்படும் என்றும், சுகாதார தடுப்பு நடவடிக்கைகள் அனைத்தும் முழுமையாகப் பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.