அவசர தொலைபேசி இலக்கத்தில் விளையாடிய நபர் கைது.!

67

அவசர தொலைபேசி இலக்கமான 119 என்ற இலக்கத்துக்கு, தொடர்ச்சியாக பொய்யான முறைபாடுகளைப் பதிவு செய்தார் என்றக் குற்றச்சாட்டில் ஒருவரை நுவரெலியா – நோர்வூட் பொலிஸார், நேற்று முன் தினம் (30) கைது செய்துள்ளனர்.

நோர்வுட் சென்ஜோன்டிலரி மேற்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த நபரொருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், தொடர்சியாக 119 என்ற அவசர இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தி பொய்யான முறைபாடுகளைப் பதிவு செய்து வந்துள்ளார். இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த பொலிஸார், அழைப்புகளை ஏற்படுத்திய இலக்கத்தின் உரிமையாளரை இனங்கண்டுக் கொள்வதற்காக ஹட்டன் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்து அதன் ஊடாக அனுமதியைப் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து குறித்த தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளரை கைது செய்துள்ள பொலிஸார், அவரிடமிருந்து கைபேசியையும் மீட்டுள்ளனர்.