கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்கு சைபர் தாக்குதல்.!

57

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் நைஜீரியா நாட்டில் இருந்து மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைய தாக்குதலை மேற்கொள்ளும் நபர்களினாலே இவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும் தற்போது குறித்த இணையதளம் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ தலதா மாளிகை உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திற்கு இரு முறை சைபர் தாக்குதல் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.