மயிரிழையில் உயிர் தப்பிய குடும்பம்: கல்முனை பிரதான வீதி முடக்கம்.

99

கல்முனை பிரதான வீதி நீலாவனையில் நடந்த விபத்தில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த நான்கு பேர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளனர்.

கல்முனை பிரதான வீதியில் வகனம் சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று விழுந்த மின்கம்பத்தினால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

குறித்த வாகனத்தில் பயணித்த தாய் தந்தை மற்றும் இரண்டு மகள் ஆகியோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.

இதேவேளை, குறித்த சம்பவத்தில் வானங்கள் முற்றாக சேதமடைந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளதுடன், கல்முனை பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.