யாழில் இன்று இராணுவத்தினர் திடீர் சுற்றிவளைப்பு-ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது.!

53

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் இணைந்து இன்று(01) சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – நாவாந்துறை, பொம்மை வெளிப் பகுதியிலேயே இன்று காலை முதல் இவ்வாறு பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணித்தியாலயத்திற்கு மேலாக இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மற்றும் கஞ்சா, ஹெரோயின் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.