விடுதலைப்புலிகள் பயங்கரவாத அமைப்பு இல்லை: சிங்களவர்களே தூண்டிவிட்டார்கள்!

83

விடுதலைப்புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு அநீதி இழைத்ததால் தான், அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மேலும் இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு தன்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.