அவுஸ்ரேலியாவில் பாரிய பொருளாதார நெருக்கடி…!!!

62

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் பாரிய பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் கடந்த 30ஆண்டுகளில் அவுரேலியாவில் பாரிய பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் அவுஸ்ரேலியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் 7 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டில் இரு காலாண்டு பகுதிகளில் தொடர்ச்சியாக எதிர்மறை வளர்ச்சி ஏற்படுமாயின் அது அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியாக கருதப்படும்.

இந்நிலையில் உலகளாவிய ரீதியில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் தனது பொருளாதார இஸ்திரத்தன்மையினை தக்கவைத்துக்கொண்ட ஒரே நாடு அவுஸ்ரேலிய என்பது குறிப்பிடத்தக்கது.