கொரோனா தடுப்பூசி போடத்தயங்கும் மக்கள்…!!!

36

உலகை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸில் இருந்து மக்களைக் காக்கும் நடவடிக்கையாக தடுப்பூசி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

தற்சமயம் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி கட்டம் கட்டமாக பரிசோதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அது வெற்றியளித்து மக்கள் பாவனைக்கு விடப்பட்டால் அதனை ஏற்றுக்கொள்வதில்லை என தெரிவித்துள்ளார்.

நாடுகளில் மொத்தம் 20 ஆயிரம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் முடிவுகளின் படி74 சதவீதம் பேர் தங்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைத்தால் போட்டுக்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் 26 சதவீதம்பேர் கொரோனா தடுப்பூசி கிடைத்தாலும் அதை போட்டுக்கொள்ள விரும்பவில்லை என்று மேலும் தெரிவித்துள்ளனர்.

பக்க விளைவுகள் ஏற்படுமோ அதன் செயல்திறன் எப்படி இருக்குமோ என்ற அச்சமே இதற்கு காரணம் எனக் குறிப்பிடப்படுகிறது.