இலங்கையின் பூர்வகுடிகளின் மொழி தமிழ் இல்லை – கொந்தளிக்கும் தேரர்.

58

இலங்கையின் பூர்வகுடிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிடுவது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று சான்றுகள் எதுவுமே கிடையாது என கோட்டாபயவினால் கிழக்கு தொல்பொருள் செயலணியின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் வரலாற்று தொன்மையை விக்னேஸ்வரன் சிலாகித்து பேசியதையடுத்து கொந்தளித்து, நேற்று முன்தினம் தேரர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இனவாதத்தை தூண்டி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி, அரசின் அபிவிருத்தி திட்டங்களை குழப்புவதற்காகவே பூர்வீகம் பற்றியும், மொழி தொடர்பாகவும் தற்போது பேசுகிறார்கள். விக்னேஸ்வரனால் கூறப்பட்ட கருத்துக்கள் அப்பட்டமான பொய்யாகும்.

அவரின் இந்த கருத்துக்களால் தமிழர்களிற்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. மாறான பிரச்சனைகளே உருவாகும்.

இலங்கையின் பூர்வகுடிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் என்றும் விக்னேஸ்வரன் குறிப்பிடுவது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று சான்றுகள் எதுவுமே கிடையாது. தமிழ்தான் இலங்கையிலிருந்த முதல் மொழியெனில் அதில் சில பகுதிகளாவத சிங்கள மொழியில் பாவிக்கப்பட்டிருக்கும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

ஆனால், தமிழ் மக்களிற்கு இலங்கையில் வாழும் உரிமையுள்ளது. அவர்களும் எமது சகோதரர்களே. இங்குள்ள பெரும்பான்மையான மக்கள் அவர்களிற்கு அநீதியிழைக்கவில்லை.

வாடகை வீட்டில் குடியிருக்கும் போது, வீட்டு உரிமையாளருக்கு யாரும் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது என்பதுபோல, இங்குள்ள ஏனைய இனத்தவர்களும், பெரும்பான்மையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது என்றார்.