செல்வச்சந்நிதியில் 30 பவுண் நகை திருட்டு: 2 பெண்கள் கைது.!

85

யாழ்.தொண்டமனாறு செல்வச்சந்நதி ஆலய தேர் திருவிழாவில் நகைகளை பறிகொடுத்த 16 பேர் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

செல்வச்சந்நிதி ஆலயத்தின் தேர் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றது.தேர் திருவிழாவில் பக்தர்களின் சன நெரிசலினைச் சாதகமாகப் பயன்படுத்தி திருடர்கள் தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

இதில் தங்க நகைகளை பறிகொடுத்ததாகத் தெரிவித்து 16 பேர் வல்வெட்டித்துறைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதில் 30 பவுண் நகைகள் களவு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இத் திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.