யோஷிஹைட் சுகா ஜப்பானின் புதிய பிரதமராக நியமிக்கபட வாய்ப்பு..!!

35

ஜப்பானின் தலைமை அமைச்சரவைச் செயலாளரும், அபேயின் விசுவாசியுமான யோஷிஹைட் சுகா, ஜப்பானின் புதிய பிரதமராக நியமிக்கபட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சியின் தலைவர்கள் பலர் யோஷிஹைட் சுகாவை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளதாக கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர, முன்னாள் வெளியுறவு அமைச்சர் பமியோ கிஷிடா, முன்னாள் இராணுவ அமைச்சர் ஷிகெரு இஷிபா ஆகியோர் பிரதமர் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும், 14ஆம் திகதி நடைபெறும் வாக்கெடுப்பில் முக்கிய பிரதிநிதிகள் மட்டுமே பங்கேற்க இருப்பதால் யோஷிஹைட் சுகாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்கு சொந்தக்காரரான ஷின்சோ அபே, தனது உடல் நலனை கருத்தில் கொண்டு அண்மையில் தனது பதவியை இராஜினாமா செய்தார்.

எனினும், புதிய பிரதமரை நாடாளுமன்றம் தேர்வு செய்யும் வரை பதவியில் நீடிப்பேன் என அவர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.