அரச சிரேஷ்ட சட்டத்தரணிகளை மேல் நீதிமன்றங்களுக்கு நியமிக்க தீர்மானம்…!!!

74

நான்கு மேல் நீதிமன்றங்களுக்கு அரச சிரேஷ்ட சட்டத்தரணிகளை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளை கருத்திற் கொண்டு ஹோமாகம, களுத்துறை, மாத்தறை மற்றும் நீர்கொழும்பு மேல் நீதிமன்றங்களுக்கு அரச சிரேஷ்ட சட்டத்தரணிகளை நியமிக்க சட்டமா அதிபர் தகவல் தீர்மானித்துள்ளார்.

மேல் குறிப்பிட்ட ஒவ்வொரு மேல் நீதிமன்றங்களிலும் சுமார் 600 இற்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரட்ன தகவல் தெரிவித்துள்ளார்.