பரபரக்கும் போதைப்பொருள் விவகாரம் தொடர்பில் . தமிழ் பட நடிகை திடீர் கைது…!!!

110

போதைப்பொருள் விவகாரம் குறித்து தமிழ் பட நடிகை ராகிணி திவேதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெயம் ரவியின் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் 2-வது கதாநாயகியாக நடித்தவர் ராகிணி திவேதி. ஆர்யன் என்ற படத்திலும் நடித்துள்ளார். அர்ஜுன் ஜோடியாக மெய்காண் படத்தில் நடித்தார். இந்த படம் வெளியாகவில்லை. கன்னடத்தில் சங்கர் ஐ.பி.எஸ், கெம்பே கவுடா, வில்லன் பங்காரி, சிவா உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கிறார். பல தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

ராகிணி தற்போது போதை பொருள் சர்ச்சையில் சிக்கி உள்ளார். சமீபத்தில் பெங்களூருவில் தடை செய்யப்பட்ட போதை பொருளை விற்ற டி.வி. நடிகை அனிகா உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்ததில் கன்னட திரையுலகினர் நடத்தும் விருந்து நிகழ்ச்சிகளில் போதை பொருட்களை அவர் விற்று வந்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியானது.

கன்னட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷும் கன்னட சினிமாவில் போதை பொருள் பழக்கம் இருப்பது உண்மைதான் என்றார். போதை பொருள் பயன்படுத்தும் 16 பேரின் பட்டியலையும் போலீசில் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் நடிகை ராகிணியின் நெருக்கமான நண்பர் ரவி என்பவரை போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலம் அடிப்படையில் நேற்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நடிகை ராகிணி திவேதிக்கு உத்தரவிடப்பட்டு இருந்தது.

ஆனால் நேற்று காலையில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவர் தலைமறைவாகி விட்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கிடையே நடிகை ராகிணி தரப்பில் ஆஜரான வக்கீல், சொந்த பிரச்சினை, உடல் நலக்குறைவு காரணமாக வருகிற 7-ந் தேதி நடிகை ராகிணி திவேதி விசாரணைக்கு ஆஜராக காலஅவகாசம் வழங்கும்படி போலீசாரிடம் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில் போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினி திவேதி கைது செய்யப்பட்டுள்ளார். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக தமிழ்ப் பட நடிகை ராகிணி திவேதியிடம் விசாரணைவழக்கு தற்பொழுது நடைபெறுகிறது. வீட்டில் சோதனை நடத்திய மத்திய குற்றப்பிரிவு போலீஸ் ராகினியை கைது செய்துள்ளனர். இது கன்னட பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.