மீண்டும் நாடு திரும்பியுள்ள 229 இலங்கையர்கள்…!!!

70

வெளிநாடுகளில் சிக்கித்தவித்த மேலும் 229 இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.

நேபாளம் மற்றும் இஸ்ரேலில் பணிபுரிந்து வந்த இலங்கையர்களே இவ்வாறு நேற்று(வியாழக்கிழமை) இரவு நாட்டினை மீண்டும் வந்தடைந்துள்ளனர்.

நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து 26 பேரும் , இஸ்ரேலில் பணிபுரிந்த 203 இலங்கையர்களும் ஜோர்தானில் இருந்து சிறப்பு விமானம் மூலம் இவ்வாறு நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நாட்டை வந்தடைந்த அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது .