பரபரப்பான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 ஓட்டங்களால் தோல்வி…!!

90

அவுஸ்திரேலிய அணியுடன் இடம்பெற்ற முதலாவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டியில், இங்கிலாந்து அணி 2 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது.

சதம்ரணில் நேற்றிரவு இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

இதையடுத்து 163 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய அவுஸ்திரேலிய அணி, 20 ஓவர்களில் 6 விக்கட்டுக்களை இழந்து 160 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

இதற்கமைய மூன்று போட்டிகள் கொண்ட 20 க்கு 20 கிரிக்கட் தொடரில் 1 க்கு 0 என்ற அடிப்படையில்
இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது 20 க்கு 20 கிரிக்கட் போட்டி நாளைய தினம் இடம்பெறவுள்ளது.