நாட்டை மீண்டும் வந்தடைந்த 196பேர்…!!!

106

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, வெவ்வேறு நாடுகளில் இருந்து மேலும் 196பேர் நாட்டை இன்று மீண்டும் வந்தடைந்துள்ளதாக கொவிட்-19 கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

ஜேர்மனியில் இருந்து 11 பேரும், டுபாயில் இருந்து 20 பேரும், தோஹாவிலில் இருந்து 75பேரும், சென்னையில் இருந்து 2பேரும், ஜப்பானில் இருந்து 2 பேரும் நோர்வேயில் இருந்து 86பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளதாக செயற்பாட்டு மையம் கருத்து குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வருகைதந்த அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாட்டிலுள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தேசிய செயற்பாட்டு மையம் குறிப்பாக சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டில் இதுவரை 38,359 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர் எனவும் 63 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 6,610 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் எனவும் அந்த மையம் தகவல் தெரிவித்துள்ளது.