மீனவ சட்டதிட்டங்களை மீறி கடலுக்கு சென்றவர்களுக்கு நேர்ந்த கதி …!!!

104

மீனவ சட்டத்திட்டங்களை மீறி வெலிகம-கப்பரதொட பிரதேசத்தில் மீன்பிடிப்பதற்காக சென்றிருந்த மீன்பிடி இழுவை படகொன்று தற்பொழுது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் பயணித்த மீனவர்கள் நேற்றிரவு (06) கரையை வந்தடைந்ததுடன் அவர்களை மாத்தறை மருத்துவமனையில் அனுமதிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டதாக மீன்பிடி மற்றும் நீர்வளத்துறை திணைக்களம் தகவல் தெரிவித்துள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கடற்தொழிலில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்த போதிலும் குறித்த தரப்பினர் இவ்வாறு சட்டவிரோமான முறையில் கடலுக்கு சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

வெலிகம-கப்பரதொட பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட 5 மீனவர்களே இவ்வாறு படகில் பயணித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது .