ரணில் விக்ரமசிங்கவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்- மஹிந்த அமரவீர

44

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே, 19 ஆவது திருத்தச்சட்டத்தில் குறைபாடுகள் உள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 19ஆவது திருத்தத் சட்டம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 19ஆவது திருத்த சட்டத்தை ஸ்தாபித்த  ரணிலே  திருப்தியடையாவிட்டால், இதனை நிச்சயமாக மாற்றியமைத்தே ஆகவேண்டும் என மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இதேவேளை தற்போதைய நிலைமையில் அரசியலமைப்பொன்றில் மாற்றமொன்று நாட்டுக்கு அவசியமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.