T20 தொடரை வென்றது இங்கிலாந்து!

56

அவுஸ்ரேலியா அணிக்கெதிரான இரண்டாவது ரி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

சவுத்தாம்ப்டன் ரோஸ் பவுல் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

இதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 40 ஓட்டங்களையும் மார்கஸ் ஸ்டொயினிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிறிஸ் ஜோர்தான் 2 விக்கெட்டுகளையும் ஜொப்ரா ஆர்செர் மார்க் வுட் மற்றும் அடில் ராஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இங்கிலாந்து அணி, 18.5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் 6 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களையும், டாவிட் மாலன் 42 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் அஸ்டன் அகர் 2 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டாக் மற்றும் அடம் செம்பா ஆகியோர் தலா 1 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக 54 பந்துகளில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்ரிகள் அடங்களாக ஆட்டமிழக்காது 77 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் தெரிவுசெய்யப்பட்டார்.