உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் 28 ஆண்டுகளாக முதலிடம்-ஸ்பெயின்..!!

65

உலகளவில் உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் கடந்த 28 ஆண்டுகளாக முன்னிலை வகிப்பதாக ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சர் சால்வடார் இல்லா தெரிவித்துள்ளார்.

உலக அளவில் 10 லட்சத்தில் 49.6பேர் உடல் உறுப்பு தானம் செய்கிறார்கள். ஆனால் ஸ்பெயின் நாட்டில் 10 லட்சத்தில் 117.4பேர் தானம் செய்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளின் மொத்த உடல் உறுப்பு தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 20 சதவீதம் ஆகும். உலகின் மொத்த தானத்தில் ஸ்பெயின் நாட்டின் பங்கு 6 சதவீதமாக உள்ளது.

அதே நேரத்தில், ஸ்பெயின் அமெரிக்காவை விட இறந்த நோயாளிகளிடமிருந்து அதிகமான உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளது.

உலகளவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 6 சதவீதம் அதிகரித்து 1,46,840ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.