நடிகை கங்கனா மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு..!!

52

நடிகை கங்கனா ரணாவத்துக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளித்திருப்பது பற்றி காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா இணையவழியில் பேட்டி அளித்தார்.

நடிகை கங்கனா ரணாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கா‌‌ஷ்மீருடன் ஒப்பிட்டது சரியல்ல. நியாய உணர்வுள்ள யாராலும் ஏற்க முடியாது. சினிமா நடிகைகள் மூலமாக ஆதாரமற்ற, அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டுகளை பா.ஜனதா கூற வைக்கிறது.

பா.ஜனதாவின் கட்டளைப்படி, மகாராஷ்டிராவை கங்கனா இழிவுபடுத்துகிறார். பா.ஜனதாவின் செயல்திட்டப்படி, எங்களை பகிரங்கமாக விமர்சிக்கிறார்.

அவர் மோடி மற்றும் பா.ஜனதாவின் செயல்திட்டத்தை பின்பற்றினாலும், அவரது பாதுகாப்பை சிவசேனா-தேசியவாத காங்கிரஸ்-காங்கிரஸ் கூட்டணி அரசு உறுதி செய்யும். அவரது விமர்சிக்கும் உரிமையை பாதுகாக்கும்.