நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி வீட்டில் அதிகாரிகள் சோதனை..!!

51

கன்னட திரை உலகிலும், பெங்களூரில் முக்கியமான விருந்து நிகழ்ச்சிகளிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்திய விவகாரம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இந்த போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவி சங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழில் பல படங்களில் நடித்த நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி என்பது குறிப்பிடத்தக்கது.