பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட திட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது…!

53

நாட்டில் கால்நடை படுகொலைக்கு தடை விதிக்கும் தீர்மானத்தை அரசாங்கம் இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவேற்றியுள்ளது.

இன்று  நடைபெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டம் தொடர்பான  தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்படி உள்ளூர் கால்நடைகளை அறுக்காமல், தேவைப்பட்டால் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்ய ஒரு திட்டத்தை கொண்டுவருவதற்கு தயாராக உள்ளதாக பிரதமர்  குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் இன்று கறுப்பு பட்டியுடன் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்திருந்தனர்.

இதன்போது மரண தண்டனை கைதி  பிரேமலால் ஜயசேகர நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் மேற்கொள்வதற்கும் அவர்கள் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர்.

இருப்பினும் நீதிமன்றத்தால் சத்தியப் பிரமாணம் செய்ய அனுமதிக்கப்பட்டார் என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் ஆட்சேபனைகளை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நிராகரித்தார்