மட்டு. பாவக்கொடிச்சேனையில் உள்ளூர் துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது…!!!

64

மட்டக்களப்பு வவுணதீவு பிரதேசத்தில் சட்டவிரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் ஒருவரை நேற்று (திங்கட்டகிழமை) மாலை கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தகவல் தெரிவித்தனர்.

பொலிசாருக்கு கிடைத்த தவல் ஒன்றிற்கமைய சம்பவ தினமான நேற்று வவுணதீவு பொலிஸ் பிரிவின் கீழ் உள்ள பாவக்கொடிச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் பொலிஸார் முன்னெடுத்த சோதனையில் வீட்டில் சட்டவிரோதமான முறையில் மறைத்து வைத்திருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றை மீட்டதுடன் 30 வயதுடைய ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றது.