ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி – ஹக்கீம் முன்வைத்த கருத்து …!!!

73

ஈஸ்டர் தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் சஹ்ரான் ஹாசிமுக்கும் ஐ.எஸ். அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் அவர் கருத்து கூறியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேறு ஒரு அமைப்பே ஈஸ்டர் தாக்குதல்களை மேற்கொண்டது என தெரிவித்துள்ளார்.

எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நாட்டை பலவீனப்படுத்தும் அவர்களின் நோக்கம் நிறைவேறியுள்ளது என்றும் குறிப்பிட்ட குழு சஹ்ரானையும் அவரது உறுப்பினர்களையும் இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தியது எனவும் தகவல் தெரிவித்துள்ளார்.

தங்களை மறைத்துக்கொள்வதற்காக ஐ .எஸ் அமைப்பின் பெயரை அந்த அமைப்பு பயன்படுத்தியது எனவும் அவர் கருத்து குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஊடகங்கள் இல்லாத நிலையில் குறிப்பிட்ட அமைப்பு எதுவென்பதை வெளிப்படுத்தமாட்டேன் எனவும் ஹக்கீம் கருத்து தெரிவித்துள்ளார்.என்பதும் மேலும் குறிப்பிடத்தக்கது .