கையடக்கத் தொலைபேசி விற்பனை குறித்து பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது…!!!

69

புதிய கையடக்க தொலைபேசிகள் குறைந்த விலைக்கு பெற்றுக்கொடுப்பதாக கூறி இணையத்தில் விளம்பரங்கள் வெளியிட்டு பண மோசடியில் ஈடுபட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உள்ளிட்ட இருவர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் புதிய வகை கையடக்க தொலைபேசிகளை பெற்றுக்கொடுப்பதாக கூறி வங்கிக் கணக்குகளின் ஊடாக பணத்தை பெற்றுக்கொண்டு இவ்வாறு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

தென்மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, 26 மற்றும் 36 வயதுடை மாத்தறை-தலகஹ பிரதேசத்தில் வசித்து வரும் சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த இருவரையும் நேற்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.